Sunday, 28 November 2010

படிக்காதீங்க ............. ப்ளீஸ் .. படிக்காதீங்க....

என்னங்க படிச்சு படிச்சு போர் அடிச்சு போச்சா..........





புக்க தொராந்தாலே தூக்கம் தூக்கமா வருதா......











எக்சாம்னாலே எரிச்சலா வருதா....

கவலைய விடுங்க.....

இனிமே படிக்கவே படிக்காதீங்க....



கேளுங்க கேளுங்க  chemistrya கேளுங்க......

chemistrya  பொறுத்த வரிகும்ம்ம் கேளுங்க  கேளுங்க கேட்டு கேட்டு எழுதுங்க...
இனி பிலிம் சாங் கேட்காதீங்க.... chemistry சாங் கேளுங்க......

(ஐ ஜாலி இனிமே எக்க்சாம் டைம் ல படிகிறேனு பொய் சொல்லிட்டு காதுல headphone  அ மாட்டிகிட்டு கேர்ள் பிரெண்ட் கிட்ட பேசலாம்னு  நீங்க அடிக்கிற கமெண்ட் எனக்கு நல்லாவே கேக்குதுங்க.....)

எனக்கு தெரிஞ்ச வரிக்கும் நான் சொல்றேன்.....  நீங்க கேளுங்க....... அப்புறம் நீங்க உங்க கம்மெண்ட என்னோட ப்ளோக்ல சொல்லுங்க... நான் கேட்கிறேன்..... எப்புடி.....??

சரி.... முதல்ல என்னோட இந்த பதிவை கேளுங்க....... இத கேட்டுட்டு. .. நீங்க சொல்லுற கம்மெண்ட வச்சுதான் நான் இனிமே இத இன்னும் பெட்டரா  எப்படி பண்ணலாமுன்னு யோசிக்கணும்!!!
சட்டு புட்டுனு கீழ உள்ள லிங்குக்கு போய் இத கேளுங்க......

http://dasischemistry.blogspot.com/p/chemistry-audio-lessons.html

Sunday, 10 October 2010

COPY WRITE பண்ணின BOOKS ஐ பிரிண்ட் எஅடுப்பது எப்படி...?

  நமக்கு தேவையான STUDY MATERIALS நெட்ல  நெறயவே கிடைக்கும்.

ஆனா எல்லாம் COPY WRITE PROTECTED  னு சொல்லி நம்மளை அதை  SAVE பண்ணவும் விடாம, பிரிண்ட் எடுகவும் விடாம டென்ஷன் ஆக்கும்ம்..........

அதுலேர்ந்து தப்பிக்க நான் கண்டு பிடிச்ச ஒரு வழி....

இது கொஞ்சம் தலைய சுத்தி மூக்க தொடர வேலை தான் ...


ஆனாலும் என்னை மாதிரி STUDY MATERIALS தேடி தேடி வெறுபடஞ்சவர்களுக்கு இது கொஞ்சம் உதவியா இருக்கும்.

முதல்ல  அந்த வெப் பேஜ SAVE  பண்ணிகொங்க..









அப்புறம் அத டைரக்ட் ஆ ஓபன் பண்ணாம ரைட் கிளிக் பண்ணி ஓபன் வித் மூலமா WORD DOCUMENT ல திறங்க...











அப்புறமா அதுல நமக்கு தேவையான PAGEA கிளிக் பண்ணினா ஒரு பாக்ஸ் செலக்ட் ஆகும்



அத அப்படியே கட் / காபி பண்ணி இன்னொரு WORD DOCUMENT ல போட்டுடீங்கான  அப்புறம் அதை அப்படியே பிரிண்ட் எடுத்துக்கலாம்..







Wednesday, 29 September 2010

சுவாமிஜி





சுவாமி விவேகானந்தரைபற்றி  நம்ம எல்லோருக்கும் தெரியும். அவர எல்லோரும்  தாடி மீசை இல்லாம தான் பார்த்திருப்போம்.... ஆனா அவரை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு.....

நாம பார்க்காத அபூர்வமான போடோஸ், (அது எப்போ எடுத்தது, கூட யார் யார் இருந்தாங்க போன்ற ) அவரை பத்தின நமக்கு தெரியாத தகவல்கள், இன்னும் பல ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் இந்த தளத்துல கிடக்குது....


சுவாமி விவேகானந்தரை பற்றி இன்னும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை படரவங்க இந்த லிங்க க்ளிக்  பண்ணலாம்
http://www.vivekananda.org/archivephotogallery.asp 

மேலும்
http://www.ramakrishna.org/sv.

ச்வாமிஜியோட படப்புகளை பெற
http://www.ramakrishnavivekananda.info/vivekananda/complete_works.htm

Sunday, 5 September 2010

ரொம்ப ரொம்ப....சுலபமான வேலை..........

உங்க சிஸ்டத்தை  கிளீன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு இல்ல...???

 



 ஈஸியா கிளீன் பண்ண இதோ ஒரு வழி....... கொஞ்சம் கீழ  கிளிக்குங்க
                                                       
                                                                   "CLEAN"

Saturday, 28 August 2010

மெகா சீரியல் பாக்கணுமா......







                       இன்றைய கால கட்டத்துல இல்லத்தரசிகளுக்குமெகா சீரியல் ரொம்பவும் இன்றியாம்யாதாதா ஆகி விட்டது.....


பாவம் அவங்களும் வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு என்னத்த கண்டாங்க........

சில வீடுகள்ல முக்கியமான சீரியல் போன்ற நேரத்துல வீட்டுல எது கேட்டாலும் கிடைக்காது...

பசிக்குது சாப்பாடு போடுன்னு கேட்டாலும் கூட " செத்த  நேரம் சும்மா இருங்க.... சாப்பாடு எப்போ வேணுமானாலும் சாப்டுக்கலாம்....இதோ.. இந்த சீரியல மட்டும் பார்த்துட்டு வந்துடுறேன்....."
அப்டின்ற பதில் தான் கிடைக்கும்....
அதையும் மீறி கோபமா கேட்ட்ம்னா... நங் .. நங்க்னு தட்டை கொண்டு வந்து வச்சு சாப்பட்டை அள்ளி போடுவாங்க .. இல்ல இல்ல... கொட்டுவாங்க..... போதாகுறைக்கு முனுமுனுப்பு வேற இருக்கும்... "செத்த நீரம் நிமதிய இருந்த இந்த மனுஷனுக்கு பிடிக்காதே".....

இனி இது எல்லதிறேந்தும் விடுதலை....
இனி யாரும்  அந்த மாதிரி சொல்ல முடியாதுள்ள....
நமக்கு புடிச்ச சீரியல நாம விட்ட ஈபிசொட்லேர்ந்து   தொடர்ந்து பார்க்க முடியும்ல... என்ன ஆச்சர்ய்மாமா இருக்கா...
அட.. நெசமாதாங்க.... இங்கே
க்ளிக்குங்க     http://www.visaran.com/
                             http://www.spottamiltv.tk/

Wednesday, 4 August 2010

தீவு...... வேணுமா........ தீவு !?




                                          இப்போது வீட்டு மனை, பங்களாவைப் போல ஒரு தீவையே விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.
     ஆம். ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநில கடல பகுதியில் உள்ள ஒரு தீவு விற்பனைக்கு உள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள ராபர்ட்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த தீவை கடந்த 2005ம் ஆண்டு 30.55 லட்சத்துக்கு வாங்கியது.
இந்த தீவை இந்நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளது. 2.35 கோடி முதல் 4.7 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைதியான அழகான இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள இதில் பெங்குயின் உட்பட பல பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. பலவகை மீன்கள் மற்றும் சிப்பிகள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களும் இதில் உள்ளன. இவை அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
சாதாரண நிலத்தைப்போல இதை மதிப்பிட முடியாது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், இந்த தீவை சிறந்த பொழுதுபோக்கு மையமாக ஆக்க விரும்புகிறவர்களும் தொடர்பு கொள்ளலாம் எந ராபர்ட்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிகாரி பால் ஒயிட் கிராஸ் தெரிவித்துள்ளார்.
நிலவை பிளாட் போட்டு விற்பனை செய்யும் காலம் அதிகதூரமில்லை.

Sunday, 25 July 2010

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

                              




              
                                                                                                                  


சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டுக் கொள்ள தேவையிருக்காது. ஒரு முறை போட்டுக்கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

Blood Sugar
.
கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால், குளூக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம்.
                                                                                                                                                               
இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம். அவர்களுக்கு விடுதலை அளிக்க புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. இதுபற்றி தேசிய நோய்தடுப்பு நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர் அவ்தேஷ் கரோலியா கூறியதாவது...
எஸ்.ஐ.ஏ.&2 (சுப்ரமோல்க்யூலர் இன்சுலின் அசெம்பளி&2) என்ற ரசாயணத்தை ஹார்மோன் வடிவில் எலிகளுக்கு ஊசியாக போட்டு பரிசோதனை நடத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. எஸ்.ஐ.ஏ. &2 ஊசி போட்ட எலிகளின் உடலில் இன்சுலின் அளவு பல மாதங்களுக்கு மாறாமல் நீடித்தது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்கு முன், எஸ.ஐ.ஏ. &2 ஹார்மோன் ஊசியை சர்க்கரை நோயாளிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
                                      மருந்துக்கு முன்னதாக உடலில் செல்லும் இந்த ஹார்மோன் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு அதிகரிக்காமல் ஒரு மாதம் வரை இருக்கும். அதிகபட்சமாக 120 நாட்கள் அதாவது 4 மாதங்கள் வரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதில் இருந்து இது விடுதலை அளிக்கும். இப்போது தினசரி அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இன்சுலின் ஊசி போட்டாலும், சாப்பிட்ட பிறகு இன்சுலின் அளவு குறைந்து மயக்கம் உட்பட பல பாதிப்புகளை நோயாளிகள் சந்திக்கின்றனர். இந்த வேதனையை எஸ்.ஐ.ஏ. &2 மாற்றும் என்றார்.
உலகம் முழுவதும் இப்போது 20 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். சர்க்கரை நோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LOVERS' SPECIAL......



காதலர்களுக்கு ஓர் நற்செய்தி......



                               காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                       இந்தியாவில், தற்போது குடும்ப கவுரத்தை பாதுகாப்பதற்காக காதலர்களை கொலை செய்யும் கவுரவக் கொலை நடைபெற்று வருகிறது. படித்தவர்கள், பாமரர்கள், நகரம், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
                      இந்தியாவில், ஆண்டுக்கு 1,000 கவுரவக் கொலை நடப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

                      கிராம பஞ்சாயத்துக்கள் ஆதரவுடன் நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் நமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.             இந்நிலையில், காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                  காதலர்கள், குடும்பத்தையும், உறவினர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இந்த அமைப்பு சட்டரீதியான பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் இணைந்து, இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். 
                    இதற்கு, "காதல் கமாண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு காதலர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். எந்த வகையான உதவி காதலர்களுக்கு தேவைப்படுகிறதென்பதை கண்டறிந்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, சட்டரீதியான உதவிகளோ, பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளோ செய்வர். 
                   காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதற்கும் கவுன்சிலிங் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைப்பர். காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, அய்யர் ஏற்பாடு செய்வது முதல் திருமணத்தை பதிவு செய்வது போன்று உதவிகளும் இதில் அடக்கம்.

இதுகுறித்து அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சஞ்சய் கூறியதாவது: கவுரவம் என்ற பெயரில், கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள், காதலர்களின் உயிருக்கு உலை வைக்கின்றன. 
                        இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றாலும், சட்டத்தை மக்களே தாங்களே கையில் எடுத்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் கூட இத்தகைய கவுரவக் கொலைகள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.