Sunday, 25 July 2010

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

                              




              
                                                                                                                  


சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டுக் கொள்ள தேவையிருக்காது. ஒரு முறை போட்டுக்கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

Blood Sugar
.
கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகளின் தினசரி கஷ்டத்தில் இருந்து இதன்மூலம் விடுதலை கிடைக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால், குளூக்கோஸ் அதிகரித்து சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இன்சுலின் அளவை பராமரிக்க தினமும் ஊசி போட்டுக் கொள்வது வழக்கம்.
                                                                                                                                                               
இதற்கு விடிவு வராதா என ஏங்குவோர் அதிகம். அவர்களுக்கு விடுதலை அளிக்க புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. இதுபற்றி தேசிய நோய்தடுப்பு நிறுவன ஆராய்ச்சி குழு தலைவர் அவ்தேஷ் கரோலியா கூறியதாவது...
எஸ்.ஐ.ஏ.&2 (சுப்ரமோல்க்யூலர் இன்சுலின் அசெம்பளி&2) என்ற ரசாயணத்தை ஹார்மோன் வடிவில் எலிகளுக்கு ஊசியாக போட்டு பரிசோதனை நடத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. எஸ்.ஐ.ஏ. &2 ஊசி போட்ட எலிகளின் உடலில் இன்சுலின் அளவு பல மாதங்களுக்கு மாறாமல் நீடித்தது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்கு முன், எஸ.ஐ.ஏ. &2 ஹார்மோன் ஊசியை சர்க்கரை நோயாளிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
                                      மருந்துக்கு முன்னதாக உடலில் செல்லும் இந்த ஹார்மோன் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு அதிகரிக்காமல் ஒரு மாதம் வரை இருக்கும். அதிகபட்சமாக 120 நாட்கள் அதாவது 4 மாதங்கள் வரை சர்க்கரை நோயாளிகள் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதில் இருந்து இது விடுதலை அளிக்கும். இப்போது தினசரி அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இன்சுலின் ஊசி போட்டாலும், சாப்பிட்ட பிறகு இன்சுலின் அளவு குறைந்து மயக்கம் உட்பட பல பாதிப்புகளை நோயாளிகள் சந்திக்கின்றனர். இந்த வேதனையை எஸ்.ஐ.ஏ. &2 மாற்றும் என்றார்.
உலகம் முழுவதும் இப்போது 20 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். சர்க்கரை நோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LOVERS' SPECIAL......



காதலர்களுக்கு ஓர் நற்செய்தி......



                               காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                       இந்தியாவில், தற்போது குடும்ப கவுரத்தை பாதுகாப்பதற்காக காதலர்களை கொலை செய்யும் கவுரவக் கொலை நடைபெற்று வருகிறது. படித்தவர்கள், பாமரர்கள், நகரம், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
                      இந்தியாவில், ஆண்டுக்கு 1,000 கவுரவக் கொலை நடப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

                      கிராம பஞ்சாயத்துக்கள் ஆதரவுடன் நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் நமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.             இந்நிலையில், காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                  காதலர்கள், குடும்பத்தையும், உறவினர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இந்த அமைப்பு சட்டரீதியான பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் இணைந்து, இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். 
                    இதற்கு, "காதல் கமாண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு காதலர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். எந்த வகையான உதவி காதலர்களுக்கு தேவைப்படுகிறதென்பதை கண்டறிந்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, சட்டரீதியான உதவிகளோ, பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளோ செய்வர். 
                   காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதற்கும் கவுன்சிலிங் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைப்பர். காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, அய்யர் ஏற்பாடு செய்வது முதல் திருமணத்தை பதிவு செய்வது போன்று உதவிகளும் இதில் அடக்கம்.

இதுகுறித்து அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சஞ்சய் கூறியதாவது: கவுரவம் என்ற பெயரில், கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள், காதலர்களின் உயிருக்கு உலை வைக்கின்றன. 
                        இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றாலும், சட்டத்தை மக்களே தாங்களே கையில் எடுத்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் கூட இத்தகைய கவுரவக் கொலைகள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.